articles

img

சீனா சாலைகளில் தானியங்கி கார்கள்

     சீனாவின் மய்ய நகரமான ஊஹானில் முழுவதும் ஓட்டுனர்கள் இல்லாத பைடு ரோபோ கார்களின் எண்ணிக்கை 100 ஆக உயர்ந்துள்ளன. மூன்றாம் நபர் காமிரா, ராடார் மற்றும் லிடார் போன்ற கருவிகள் ஒருங்கிணைந்து காட்சிகள் தெளிவு குறைவான நிலைமை யிலும் மேம்பட்ட முறையில் பார்ப்பதற்கு உதவுகின்றன. பார்வையை அடிப்படையாகக் கொண்ட அமெரிக்க டெஸ்லாவின் தீர்வுக்கு மாறுபட்ட அணுகுமுறை இது. ஊஹான் சாலைகளில் தானே ஓடும் கார்களை இயக்க கடந்த ஆண்டு பைடு நிறுவனம் அனுமதி பெற்றது. சீனா முழுவதும் 200க்கும் மேற்பட்ட முழுவதும் ஓட்டுனர்கள் இல்லாத கார்களை இயக்க திட்டமிட்டுள்ளதாம்.